“தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது” – தமிழக சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, நேற்று புதிதாக 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,272 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 2,413 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,06,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,061 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.