கந்த சஷ்டி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு!

கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக துரிதமாக செயல்பட்டு அனைத்து வீடியோக்களையும் நீக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு. கந்தனுக்கு அரோகரா என நடிகர் ரஜினி டுவீட் செய்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டனர். இதற்கு ரஜினி கண்டனம் தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் ரஜினி வெளியிட்டுள்ள டுவீட்டில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு எனக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா!. இவ்வாறு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.