ஒரே வண்டிக்குள் 4,275 மது பாட்டில்கள்… எங்கு தெரியுமா?

ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜீலுகுமில்லி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநில சிறப்பு அமலாக்க துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் 4,275 மது பாட்டில்கள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், குவார்ட்டர் பாட்டில்கள் 4,106 , 750 மில்லி லிட்டர் பாட்டில்கள் 216 மற்றும் ஒரு லிட்டர் பாட்டில்கள் 43.

வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், தெலுங்கானாவில் ரூ .7.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x