கொத்து கொத்தாய் வீணாகும் தர்பூசணிகள்.. கண்ணீர் விடும் விவசாயிகள்!

பவானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கோடைக்காலத்தை முன்னிட்டு, பெருமளவிலான விவசாயிகள் தர்பூசணி மற்றும் முலாம்பழங்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், திடீரென வந்த கொரோனா தடை உத்தரவால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால், பவானியில் விளைந்த தர்பூசணிப் பழங்களை வாங்குவதற்கு, வியாபாரிகளால் வருகை தர முடியவில்லை. இதனால், பெரும் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள், கேட்கும் விலைக்கு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவும் போக ஏராளமான தர்பூசணிப் பழங்கள் எஞ்சுவிடுகின்றன. சாகுபடி செய்யப்பட்ட நிலத்திலேயே பழுத்து, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மீன்களுக்கு உணவாக தர்பூசணிப் பழங்களைக் கொடுக்க முடிவு செய்தனர். மீன்களும் விரும்பி உண்பதால்,  தர்பூசணிப் பழங்களை ஏரிகளில் வளர்க்கும் மீன்களுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர். ஒரு டன் பழங்கள், ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கூலிக்கு ரூ.2 ஆயிரம் செலவிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x