“அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் சிறப்பு வாய்ந்தது திமுக தேர்தல் அறிக்கை” – மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி, பணிபுரியும் காலத்திலேயே உயிர்நீத்த பொறுப்பாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதியால் வெளியிடப்படும் திமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்கள், தொழில் துறையினர், ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்தது திமுக தேர்தல் அறிக்கை.

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயாரிக்க கட்சியின் பொருளாளர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடி, கோரிக்கை மனுக்களைப் பெற்று தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றனர்.

பேச்சைக் குறைத்து செயலில் நம் திறமையை காட்ட வேண்டும் என்று என்னை வளர்த்து ஆளாக்கிய கருணாநிதி கற்றுக் கொடுத்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x