வடமாநிலத்தில், 11 வயது தங்கச்சியை வெட்டிக்கொன்ற அக்கா… காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில்  அக்காவும், அவளது காதலனும் கைதாகியுள்ளனர்.

கோர்பா பகுதியில் கடந்த சனிக்கிழமை பகல்  12 மணி அளவில், 11 வயது சிறுமி ஒருவர் அவரது குடியிருப்பில் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மொபைல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தன் தங்கச்சியை வெட்டிக்கொன்றதாக, அந்த சிறுமியின் 16 வயது அக்கா போலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாள்.

ஆனால், மொபைல் போன் சண்டைக்காக, இப்படி யாரேனும் வெட்டிக்கொல்லும் அளவுக்கு செல்வார்களா என்று போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண் பயன்படுத்திய மொபைலை கைப்பற்றி, தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த வினாய் ஜகத் என்ற இளைஞனுடன் அந்த பெண் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் பல உண்மைகள் வெளியானது.

அந்த இளைஞன் அளித்த வாக்குமூலத்தில், “பெற்றோர் திருவிழாவுக்கு சென்றுவிட்டதாக கூறி, என்னை குடியிருப்புக்கு வருமாறு என் காதலி அழைத்தாள். நாங்கள் இருவரும் ரூமுக்கு சென்று நெருக்கமாக இருந்தோம். இதனிடையே, நடுஇரவில் திடீரென விழித்துக்கொண்ட எனது காதலியின் தங்கையான 11 வயது சிறுமி, நாங்கள் நிர்வாணமாக நெருக்கமாக இருப்பதை, பார்த்துவிட்டாள். ‘அவள் யாரிடமாவது சொல்லிவிட்டாள் என்ன செய்வது?’ என்று பயம் ஏற்பட்டது.

அதையடுத்து, அந்த சிறுமியை, நாங்கள் இருவரும் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொன்றோம். பின்னர் கோடாரியால் வெட்டினோம். ஆனால், இந்த கொலையில் என்னை சிக்கவைக்க என் காதலிக்கு மனமில்லை. எனவே, அவளே பழியை ஏற்றுக்கொண்டாள். மொபைலுக்காகவே தங்கையை வெட்டிக்கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாள். ஆனால், போலீசார் சந்தேகப்பட்டு உண்மையை கண்டுபிடித்துவிட்டனர். ” இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கைது செய்யப்பட்ட கொலைக்காரன், அந்த ஊரில் உள்ள வங்கியின் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு வட்டிப்பணம் வசூல் செய்ய வந்த இடத்தில், அந்த பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டதாக அவன் கூறியுள்ளான்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x