வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை..

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயர்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ரஞ்சனி (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (31) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் கடந்த  20 மாதத்துக்கு முன்பு ஒரு கோயிலில் திருமணம் செய்து சசிகுமாரின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17 மாதமாக வரதட்சணை கேட்டு ரஞ்சனியை சசிகுமார் கொடுமைப்படுத்தியுள்ளார். இவருக்கு உடந்தையாக அவரது தாயும் இருந்துள்ளார். இதனால் ரஞ்சனி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரஞ்சனியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் பதறியடித்து கொண்டு சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ரஞ்சனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து ரஞ்சனியின் கணவர், தாயிடம் விசாரித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x