கொலையில் முடிந்த கோழி சண்டை; ஆவடியில் பரபரப்பு!

ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடிஅடுத்துள்ள ஆரிக்கபேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். சசிகுமாரின் கோழிகள் அவ்வப்போது, அன்பழகன் வீட்டு வளாகத்தில் மேய்ந்து வந்துள்ளது.

இதனால் சசிகுமார் அன்பழகன் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று(ஜூலை 18) கோழி அன்பழகன் வீட்டிற்குச் சென்றுள்ளது. அப்போது கோழியை அன்பழகனின் மனைவி, கல்லை கொண்டு எறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் அதனைத் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சசிகுமார், அன்பழகன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சசிகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சசிகுமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x