அரசு நிர்வாகத்தை நடத்த தெரியாதவர் டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் நிலையில் டிரம்ப் அரசு வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை சரியாக கவனிக்கவில்லை என ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தற்போது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கமலா ஹாரிஸ் பிரசாரம் ஒன்றில் பேசியதாவது: கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் கொடியது. இது குறித்து அடிக்கடி டுவிட்டரில் பதிவிடுவதன் மூலமாக மட்டுமே சரிப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் குறித்து டுவீட் இடுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார் டிரம்ப்

கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டுப் போகும் என நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது. அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நம்மை விட்டுப் போகாது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனப் பேசிய ஹாரிஸ், அரசு நிர்வாகத்தை நடத்துவது எப்படி எனத் தெரியாதவர் டிரம்ப். இவ்வாறு கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x