இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் பொன்முடி, ஆ.ராசா ஆகியோக்கு முக்கிய பதவிகள் வழங்க வாய்ப்பு!

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோரை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா தாக்கத்தால் முதன்முறையாக காணொலி மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளராக தேர்வான துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த பேராசிரியர் அன்பழகன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று, திமுகவில் ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில், பொன்முடி, ஆ.ராசா ஆகியோரையும் நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x