கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்… ஏன் இவ்வளவு மட்டமான வேலைக்கு இறங்கினார்?

இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்ய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், அம்மாநிலத்தில் எரிசக்தி துறை அமைச்சராக இருக்கும் பிரதியுமான் சிங் தோமர், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாகவும், முறையாக பராமரிப்பது இல்லை என்றும் சில பெண் ஊழியர்கள் புகார் செய்தனர். தொடர்ந்து, கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளார். திடீரென யாரும் எதிர்பாராத விதமாக,பொருட்களாக கொண்டு அமைச்சரே கழிப்பறையை சுத்தம் செய்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கழிப்பைறைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தி சென்றுள்ளார்.