அசாமில் தென்பட்ட அரியவைக ‘தங்க நிற’ புலிகள்

இந்தியாவில் அரிதாக காணப்படும் தங்க நிற புலிகள் அசாமின் காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்டன.
இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் புலிகளின் நிறத்தை விட இந்த புலிகளின் உடல் அதிக ஜொலிப்புடன் காணப்படும். இதற்கு தங்கப் புலிகள் என்று பெயர். அழிந்து வரும் இந்த இன புலிகளில், 4 மட்டும் அசாமில் உள்ளன.
இவற்றில் ஒரு புலி அண்மையில் குட்டிகளை ஈன்றுள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த வகை புலிகளை காக்க அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.