ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் தொல்லை!! போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தருமபுரி போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி அண்ணாநகரை சேர்ந்தவர் அருண். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 28). கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தார். அங்குள்ள அரசு பள்ளியில் 7 போலீஸ்காரர்கள் தங்கி இருந்தனர்.

இதற்கிடையே நேற்று இரவு தான் தங்கி இருந்த அறையில் வெங்கடேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற உயர் அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

திருமணமாகாத நிலையில் வெங்கடேஷ் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

வெங்கடேஷ் சமீப காலமாக ஆன்லைனில் ரம்மி உள்பட பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிக அளவில் பணத்தை இழந்ததால் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர்கள் உயர் அதகாரிகளிடம் புகார் கொடுப்பதாக கூறி உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த வெங்கடேஷ் தான் தங்கி இருந்த அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x