அரசுடமையானது ஜெயலலிதா இல்லம் – ரூ.68 கோடி செலுத்திய தமிழக அரசு!

ஜெயலலிதா இல்லத்தை ரூ.68 கோடி செலுத்தி அரசுடமையாக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். நினைவு இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. எனவே நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன். மீண்டும் சட்டப்போராட்டம் தொடரும். அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.