மீண்டும் சுங்க கட்டணம்! மத்திய அரசுக்கு எதிர்ப்பு

நாடு முழுவதும் தேசிய ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், சுங்கச்சாவடிகள் இயங்காமல் இருந்து வருகிறது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் ஏப்ரல் 20 முதல் தீவிர கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்கும் என்றும், சுங்கக் கட்டணம் வழக்கம்போல் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.