பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்.. காங்கிரஸ் அமோக வெற்றி

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து 80 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடந்து தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்படயிருந்த உள்ளாட்சி தேர்தல் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வருட காலத்திற்க்கு பிறகு பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 8 மாநகராட்சிகள், 109 நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும் 4 வார்டுகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக 71.39 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மன்ஸா மாவட்டத்தில் 82.99 சதவீதமும், குறைந்த பட்சமாக எஸ்ஏஎஸ் நகரில் 60.08 வாக்குகள் பதிவாகியிருந்தது. 2,302 வார்டுகளில் 9,222 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டனர். மாநில கட்சியான சிரோமணி அகாலிதளம் மற்றும் பா.ஜ.க-வின் 20 ஆண்டுகள் கூட்டணி, பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தின் காரணமாக அண்மையில் கூட்டணி உடைந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் அந்த இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனர்.

பிப்ரவரி 17 தேதி (நேற்று) காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் 8 மாநகராட்சியில் பதிண்டா, ஹோஷியார்பூர், கற்பூரத்தாலா , அபோஹார் , பாட்டாலா , பதன்கோட் ஆகிய 6 மாநகராட்சிகளை ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x