ரயில் நிலையங்களில் இனி மண் குவளையில் டீ !!

உலகில் மிகப்பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே துறை தற்போது இயற்கையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் முதல்படியாக 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பேப்பர் கப்புகளுக்கு பதிலாக மண் குவளைகளில் டீ, காபி விற்பனை செய்யும் திட்டத்தை துவங்கி வைத்து உள்ளது. 

இது குறித்து விளக்கி கூறி உள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல். ரயில்வே துறையை நவீனமயமாக்கும் அதே வேளையில் நாம் பசுமையை நோக்கியும் செல்ல வேண்டியுள்ளது.

அதிக அளவில் ரயில்வேயில் உபயோகிக்கப் படுகின்ற. டி மற்றும் காபி கப்புகளுக்கு பதிலாக மண் குவளையை பயன்படுத்துவது. என்று ரயில்வே துறை முடிவு செய்து அதன் முதல் கட்ட முயற்சியாக வாரனாசி உட்பட 400 ரயில் நிலையங்களில் மண் கப்புகளை உபயோகப்படுத்த சோதனை முயற்சி தொடங்கியுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் மண் குவளைகள் மட்டுமே பயன்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x