விக்கிபீடியாவை முடக்குவோம் – மத்திய அரசு எச்சரிக்கை!

இந்திய வரைபடத்திலிருந்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான், அக்ஷய் சின் ஆகிய பகுதிகளை விக்கிபீடியா நீக்கியிருப்பதற்கு மத்திய தகவல் தொழிநுட்ப அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விக்கிபீடியா என்பது இலவச ஆன்லைன் என்சைக்ளோபீடியோ ஆகும். யார் வேண்டுமானாலும் இதில் கட்டுரைகளுக்கு பங்களிப்பு செலுத்தலாம். இந்த நிலையில் பூடான் – இந்தியா உறவு குறித்து இதில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

அதில் இந்திய வரைபடத்தில் இருந்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான், அக்ஷய் சின் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இதனை டுவிட்டரில் அமித்ஷாவிடம் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிபீடியாவுக்கு ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அதில் உடனடியாக சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்க வேண்டும். இல்லை என்றால் இணையதளம் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது. நவ., 27-ல் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வரைபடம் நீக்கப்படவில்லை

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x