தமிழகத்தில் கிருமி நாசினி தெளிக்கும், ‘ரோபோ’

பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும், ‘ரோபோ’வை, தனியார் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில், ‘அரசு இன்ஜினியரிங் கல்லுாரி’ செயல்படுகிறது. தனியார் கல்லுாரியான இங்கு, இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய்பாலாஜி, ஜோஸ்வா ஆராக் ஆஸ்டின், என்.எஸ்.எஸ்., முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், துறைத் தலைவர் சதீஷ்குமார் வழிகாட்டுதலில், நவீன ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
இந்த ரோபோ, பஸ்களின் இருக்கைகளில் உள்ள துாசு, குப்பைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோபோ இயந்திரத்தில், 2 லிட்டர் சானிடைசர் நிரப்பினால், 10 நிமிடங்களில், குறைந்தது மூன்று பஸ்களை சுத்தம் செய்யும்.
இதை, ‘ஆண்ட்ராய்டு’ மொபைல் போன் மூலம் இயக்க முடியும். ரோபோவின் செயல் விளக்கம், நேற்று கல்லுாரி வளாகத்தில், வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு முன்னிலையில் நடந்தது.ரோபோவை உருவாக்கிய மாணவர்களையும், வழிகாட்டிய ஆசிரியரையும் அமைச்சர் பாராட்டினார்.