தெற்கு சூடானால் புகழப்படும் கபசுரம் குடிநீர்!

தமிழக சித்த மருத்துவர்கள் உருவாக்கிய நோய் எதிர்பாற்றல் பெருக்கக்கூடிய கபசுர குடிநீருக்கு தெற்கு சூடான் அமைச்சர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு தமிழக அரசும் அங்கீகாரம் அளித்தது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையிலுள்ள ‘ஆயுஷ்’ மருத்துவமனையின் சித்த மருத்துவர் இளவரசன் வாயிலாக, கபசுர குடிநீரை பயன்படுத்தி தெற்கு சூடானுக்கான இந்திய துாதர் எஸ்.டி.மூர்த்தி பலனடைந்தார். இதையடுத்து,அவர் கபசுர குடிநீர் மற்றும் சித்த மருந்துகளை, அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்தார்.
இதை தொடர்ந்து, இளவரசன் உட்பட, சித்த மருத்துவர்கள் உதவியுடன், கபசுர குடிநீர் பற்றிய விழிப்புணர்வை சூடான் மக்களுக்கு ஏற்படுத்த உள்ளனர்.