கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாபில் 144 தடை உத்தரவு..

கரோனா தொற்று காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் 144 தடை உத்தரவை மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு பேருக்கு மேல் கூடுவதை தடைசெய்யும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த உத்தரவின்படி, ஆகஸ்ட் 31 வரை மாநிலத்தின்அனைத்து நகரங்களிலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

திருமண விழாக்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த முதல்வர் அம்ரீந்தர் சிங் தேவை ஏற்பட்டால்ஆகஸ்ட் 31க்குப் பிறகு கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் இதுவரை 39 ஆயிரத்து 327 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள், பஞ்சாபில் கரோனா பாதிப்பு 64 ஆயிரம் வரை உயரும் என்றும், செப்டம்பர் 15 க்குள் ஒரு லட்சத்தை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x