பஞ்சாப் முதல்வர் 7 நாள் தனிமைப்படுத்திக்கொண்டார்.. கொரோனா அறிகுறி

பஞ்சாப் சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், 29 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து முதல்வர் அமிரீந்தர்சிங் 7 நாள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார்.
பஞ்சாப் காங்.முதல்வர் அமிரீந்தர்சிங்கை கடந்த சில தினங்களுக்கு முன் இரு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மேலும் 29 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். நேற்று முதல்வர் அமிரீந்தர்சிங் உடல் பரிசோதனை செய்து கொண்டார். லேசான கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள டக்டர்கள் அறிவுரை வழங்கப்பட்டதையடுத்து தன்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.