மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்கள்.. பராமரிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்..

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படாமல் பல மாதங்களாக உள்ளதால், வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது.

இதை பராமரிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகள், சாராயம் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்த வாகனங்கள் அனைத்தும், நீதிமன்றத்தில் அதற்கு உரிய நபர்கள், ஆவணங்களோடு பணத்தை செலுத்தி, அதை மீட்டு கொள்ள வேண்டும்.

அது போல், மீட்காமல் பல மாதங்களாக காவல் நிலையங்களில் நிற்கும் இருசக்கரம், மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும், விழுப்புரம், காகுப்பம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதன் வருவாய் அரசிடம் ஒப்படைக்கப்படும்.இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வானுார் நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்கப்பட்டது.

அதன் பேரில், மதுவிலக்கு பறிமுதல் வாகனம் ஏலம் விட நீதிமன்றம் தடை விதித்தது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, பொது ஏலம் நிறுத்தப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மட்டுமின்றி, ஆயுதப்படை வளாகத்திலும் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் மழை, வெயிலில் மக்கி வீணாகும் சூழல் நீடிக்கிறது.

இந்த வாகனங்களில் பராமரிப்பு நிலைகள் தேய்ந்து கொண்டே போவதால், ஏலம் விடும் சூழல் வரும் போது, அந்த வாகனத்திற்கான மதிப்பு குறைந்து ஏலம் போகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த வாகனங்களை காவல் நிலையங்களில் வைத்து பராமரிக்க இடமின்றி, அங்குள்ள காவலர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். பொது ஏலம் விடுவதற்கான வழக்கில், தடையை நீக்க கோரி, போலீசார் மூலம் சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.மதுவிலக்கு பிரிவு உயர் அதிகாரிகள் தடையை நீக்க கோரிய வழக்கிற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்வு கண்டுள்ளதாகவும், விரைவில் வாகனங்கள் பொது ஏலத்தில் விடுவதற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x