மதுபோதையில் தகராறு செய்த நபர்.. உயிருடன் எரித்த உறவினர்கள்..?

மதுபோதையில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்த நபரை அவரது உறவினர்கள் மரத்தில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர், ராஜ்கிஷோர் பிரதான். இவர் மதுபோதையில் அடிக்கடி உறவினர்கள், கிராமத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

நேற்று முன்தினமும் அதே செயலில் ராஜ்கிஷோர் ஈடுபட, ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர்.

உடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்கிஷோர், வழியிலேயே இறந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x