பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த 3 பெண்கள்!!!

ஓசூரில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தில் பயணியிடம் 3 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த மூன்று பெண்கள் வசமாக சிக்கினர்.

ஓசூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் ஓசூரில் இருந்து சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி பகுதியில் 3 பெண்கள் அதே பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளனர்.

அப்போது வாணியம்பாடி சுங்கசாவடி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது அந்த 3 பெண்களும் ஹரிகிருஷ்ணன் வைத்திருந்த பையை லாவகமாக திருடிகொண்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட ஹரிகிருஷ்ணனின் மகள்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சக பயணிகள் மற்றும் சுங்க சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஆகியோர் விரட்டி சென்று அவர்களை பிடித்து பையை மீட்டனர். மேலும் பையில் இருந்த 3 சவரன் தங்க நகையை காப்பாற்றப்பட்டது.

பின்னர் அங்கு விரைந்து வந்த அம்பலூர் காவல் துறையினரிடம் அப்பெண்கள் ஒப்படைக்கப்பட்டனர். இதைகுறித்து ஹரி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த காவியா, பாரதி, சுனிதா என்பது தெரியவந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x