ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி

பிரிஸ்டல்: தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது மகாத்மா காந்தி பயன்படுத்திய ஒரு ஜோடி தங்க முலாம் பூசப்பட்ட வட்டக் கண்ணாடிகள் வெள்ளியன்று ரூ.2.5 கோடிக்கு ஏலம் போனது.

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1920 முதல் 1930க்கு இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்ரிக்காவில் ஒரு பெட்ரோல் நிறுவனத்தில் வேலை பார்த்த  அவரது மாமாவிடம் தன்னுடைய கண்ணாடிகளை தந்துள்ளார். அது கைமாறி இங்கிலாந்தின் பிரிஸ்டலை சேர்ந்த முதியவர் ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக இருந்துள்ளது. அதன் மதிப்பை உணராத அவர், ஒரு உறையில் போட்டு உள்ளூர் ஏலம் விடுபவர் மூலம் ஏலம் விட்டுள்ளார்.

அதன் ஆரம்ப விலையாக ரூ.14 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது காந்திய பயன்படுத்திய கண்ணாடி என்ற செய்தி அறிந்ததும், உலகம் முழுவதிலுமிருந்து பலர் அதனை வாங்க போட்டி போட்டுள்ளனர். இறுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ரூ.2.55 கோடிக்கு காந்தியின் நூற்றாண்டு பழமை வாய்ந்த கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார். இதனால் அதனை ஏலம் விட்டவர் வாழ்க்கையே மாறி போனதாக ஏலம் விடுபவர் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x