யானை விவகாரம்; விவசாயி வில்சன் கைது!

கேரளாவில் யானைக்கு வெடிமருந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் நபர் கைதாகி உள்ளார். இவர் பெயர் வில்சன் என்று தெரியவந்துள்ளது.
யானை இறப்பும் போலி செய்திகளும்
கேரளாவில், வெடிபொருட்கள் நிரம்பிய பழத்தை, யானை ஒன்று உட்கொண்டு, மே 27இல், இறந்துபோனது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று பா.ஜ.க கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரின் ஊடக ஆலோசகராக உள்ள அமர் பிரசாத் ரெட்டி என்பவர், யானை விவகாரத்தில் இரண்டு முஸ்லிம்கள் கைதானார்கள் என்று ஊடகங்களில் செய்தி பரப்பினார். அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “அஜ்மத் அலி மற்றும் தமீம் ஷேக் ஆகியோர் யானை கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். கேரள முதலமைச்சர் இவ்விவகாரத்தில் மதம், ஜாதி, இனம் என்ற அடிப்படையில் கருணை காட்டாக்கூடாது. வெளிப்படைத் தன்மையாக விசாரணை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
மத்திய அரசின் உயரதிகாரி ஒருவரிடமிருந்து இத்தகைய தகவல் வந்ததால், அதை உண்மை என்று நம்பி, பல ஊடகங்களும், செய்திகளை வேகமாக பரப்பிவிட்டன. மேலும், 14 ஆயிரம் லைக்ஸ் மற்றும் 9 ஆயிரம் ஷேர்கள் அந்த பதிவுக்கு கிடைத்தன.
பின்னர், கேரள மாநிலத்தில், யானை விவகாரத்தை விசாரித்து வரும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், அமர் பிரசாத் ரெட்டி சொன்னது முழுவதும் பொய் என்பது தெரியவந்தது. “இதுவரை யாரையும் இவ்வழக்குத் தொடர்பாக கைது செய்யவில்லை. யானை இறந்தது தான் மலப்புரமே தவிர, சம்பவம் நடந்த இடம் பாலக்காடு. யானைக்கு வெடிவைக்கப்படவில்லை. பன்றிக்கு வைக்கப்பட்ட உணவை யானை தவறுவதலாக தின்றதால், வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இரண்டு வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் முடியாமல் இருந்து, இறந்து போயுள்ளது. ” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று வில்சன் என்பவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள மாநிலம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் பெயர் வில்சன் என்றும், விவாசயம் செய்து வருபவரான அவர், வயல்களை காக்கும் நோக்கில், வெடிகள் சுற்றப்பட்ட அன்னாசி பொறிகளை வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், முஸ்லிம்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மத்திய அரசே, குறிப்பிட்ட சமுதாயம் மீது, பகையுணர்வை வளர்க்கும் போலி செய்திகளை பரப்புவதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஆதாரம் – freepressjournal