அறிகுறிக்கு முன்பே கொரோனாவை கண்டறியும் ஸ்மார்ட்வாட்ச்!

ஸ்மார்ட்வாட்சுகள் இதய துடிப்பு, கலோரி எரிப்பு போன்றவற்றை கணக்கிட்டு சொல்லி வந்த நிலையில், புதியதாக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்ச்வாட்ச் கொரோனா உள்ளதை அறிகுறிகளுக்கு முன்பே கண்டறிகிறதாம்.

கொரோனா தொற்றை சோதிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய முயற்சிகளை முயன்று பார்க்கின்றனர். சமீபத்திய ஆய்வின்படி, ஃபிட்பிட் மற்றும் ஆப்பிள் போன்ற ஸ்மார்ட்வாட்ச்கள் அறிகுறிகள் காட்டத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தங்கள் பயனர்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய உதவுகிறது.  

கொரோனா சமூக பரவல் ஆகிவிட்டதால் முன்னரே அதைக் கண்டறிவது இப்போது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான் ஸ்மார்ட்வாட்சை வைத்து லண்டனின் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் இதய துடிப்பு, உடல் செயல்பாடு மற்றும் தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் கொரோனா வைரஸ் நிகழ்வுகளின் வாய்ப்பை அதிகரிக்கும் என்கின்றனர்.

இதன் மூலம் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுக்கு முன்பே தொற்றுநோயைக் கண்டறிய முடியும். இதற்காக விஞ்ஞானிகள் ‘மாஸ் சயின்ஸ்’ என்ற  செயலியை பயன்படுத்தியுள்ளனர். இதனை ஸ்மார்ட்வாட்சுடன் இணைத்து பயன்படுத்தியதில் மக்களின் சமிக்ஞைகளைக் கண்காணிக்க உதவியுள்ளது.

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x