படகு கவிழ்ந்து 23 பேர் பலி; எண்ணிக்கை உயர வாய்ப்பு!

வங்கதேசத்தில் படகுடன் மோதி மற்றொரு படகு, ஆற்றில் மூழ்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா நதியில், ஆட்களை ஏற்றிகொண்டு சென்ற படகு ஒன்று, மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 23 பேரது சடலங்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடலில் மூழ்கிய படகில் 50 பேர் இருந்ததாக உயிர் பிழைத்த ஒருவர் கூறினார். ஆனால், 71 பேர் அந்த படகில் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x