வேலை பார்த்த வங்கியில் ரூ.1.8 கோடி சுருட்டிய மேலாளர்!

நாகை மாவட்டம், திருக்குவளையில், ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்தவர் விவசாயிகளுக்கு கடன் மற்றும் இன்சூரன்ஸ் வழங்கியது போல், 1.86 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இவர் தான் திருக்குவளை எஸ்.பி.ஐ.,யில் மேலாளராக உள்ளார். சுமார் 2 கோடி ரூபாயை கையாடல் செய்து தலைமறைவாகிவிட்டார். கடந்த ஆண்டு மார்ச் 13ல் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். 

தற்போது அவர், உளுந்துார்பேட்டையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், உளுந்துார்பேட்டை வந்து, கார்த்திகேயனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், புல்லட் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x