ரத்த அழுத்தம் குறைய தேன் –லவங்கம் கலவை போதும்..!

தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடி சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் குறைந்து இதயம் பலம் பெறும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையானது, உங்கள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆய்வுகளில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாகவும், ட்ரைகிளிசரைடு அளவை 11 சதவீதம் வரை குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
தேன் எச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இரண்டு உணவுகளிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை இதயத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளன.
பாலிபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது. பக்கவாத ஆபத்து குறைகிறது. தேன் மற்றும் இலவங்கப்பட்டை அழற்சியை தடுக்கக்கூடியது. நாள்பட்ட அழற்சி (inflammation) தான் இதய நோயை உருவாக்குகிறது.