வங்கிப் பரிவர்த்தனைகளில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்..

இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி மந்திரி நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,“அரசு வணிகத்தை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு வசதி, அரசின் சமூகத் துறை முயற்சிகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்துவது போன்றவற்றில் இனி தனியார் வங்கிகள் சம பங்களிப்பாளர்களாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.
அரசு வணிகங்களை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இனி எந்த தடையும் இல்லை எனக்கூறப்படுகிறது.