மலேசியாவில் 62 வயதுடைய பிரபல பெண் அரசியல்வாதி, 28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்தவர் பிரபல அரசியல்வாதி சலேஹா புஜாங். இவருக்கு 62 வயதாகிறது. இவருக்கும், அஷ்ரஃப் என்ற 28 வயது இளைஞனுக்கும் ஜேசின் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இருவருக்கும் 34 வயது வித்தியாசம் என்ற நிலையில் தம்பதியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
திருமணம் குறித்து சலேஹா புஜாங் கூறுகையில், “முதல் முறையாக பல ஆண்டுகளுக்கு முன், வேறு ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வைத்துதான் அஷ்ரஃபை சந்தித்தேன். அப்போதே எங்களுக்குள் காதல் உணர்வு ஏற்பட்டது.
எனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், என் முதல் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். தொடக்கத்தில் என் மறுமணத்துக்கு, வயதை காரணமாக காட்டி, என் பிள்ளைகள் சம்மதிக்கவில்லை.
