“இந்தி பேசாத மாநில மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்” – டிடிவி தினகரன்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில்,’இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்’ என தமிழக மருத்துவர்களைப் பார்த்து ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மாநில மக்கள் மீதான அச்சுறுத்தல்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில்,’இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்’ என தமிழக மருத்துவர்களைப் பார்த்து ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மாநில மக்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மருத்துவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட ஆயுஷ் செயலாளர் வருத்தம் தெரிவிக்க தொடர்புடைய அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x