இங்கிலாந்து எதிரான கடைசி 20ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது.

மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடராகும். ஏற்கனவே இங்கிலாந்து இரண்டு போட்டியில் வென்ற நிலையில் தொடரை கைப்பற்றியது.

நேற்று நடந்த கடைசி இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜானி பேரிஸ்டோ 55 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் மற்றும் மார்ஸ் தலா 39 ரன்கள் குவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x