பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.