3-டி சிறுநீரகம் உருவாக்க இஸ்ரேலுடன் கூட்டணி சேரும் அமெரிக்கா!

அமெரிக்காவும், இஸ்ரேலும் உறுப்புகளின் பற்றாக்குறையை சமாளிக்க 3-டி சிறுநீரகம் உருவாக்கும் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இஸ்ரேலின் கோல்ப்ளாண்ட் பயோடெக்னாலஜிஸ் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட யுனைடெட் தெரபியூடிக்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டமைப்பில் 3-டி வகையில் சிறுநீரகம் தயாரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. கோல்ப்ளாண்டின் இந்த உரிமை மனித உறுப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உரிமத்தை நடைமுறைபடுத்த அமெரிக்க தெரபியூடிக்ஸ்ட், இந்திய மதிப்பில் 22 கோடியை இஸ்ரேல் அமைப்பிற்கு வழங்கியுள்ளது.

இது பற்றி கோல்ப்ளாண்ட் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “உலக அளவில் உறுப்புகளின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்யவே யூனைடெட் தெரபியூடிக்ஸ்ட் உடன் கூட்டமைத்துள்ளோம்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மருத்துவ உலகில் மிகப்பெரிய மாறுதல் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், உலக அளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இதே நிலை தான். இதுபோன்ற உறுப்புகள் உருவாக்கம் இதற்கு நிச்சம் தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x