முதல்வர் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் என்ன?

அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. அதன் ரிசல்ட் குறித்து தகவல்கள் இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது.

தலைமை செயலகத்தில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன், நடந்த அரசு நிகழ்ச்சியில், முதல்வருடன், மின்துறை அமைச்சர், தங்கமணி பங்கேற்றார். அதற்கு மறுநாளே அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது மகன், கார் டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கும், கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதைத் தொடர்ந்து, பழனிச்சாமிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வருக்கு அவ்வப்போது, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை நடத்தப்படுகிறது’ என்றனர்.

இந்த பரிசோதனை ரிசல்ட் எப்போது வரும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுகுறித்து தகவல்கள் இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x