முதியவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை திருடிய ஏடிஎம் மோசடி கும்பல்

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முதியவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாக ஏமாற்றி ஏ.டி.எம்., அட்டை மீதுள்ள எண், ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றை பெற்று ஒரு லட்சம் ரூபாயை திருடியுள்ளனர்.
வங்கிகள் ஏ.டி.எம்., அட்டையில் உள்ள எண்களை எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களிடம் செல்போன் மூலம் கேட்பதில்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அது பற்றி அறியாத பலர் லட்ச கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முதியவர் சதாசிவம் என்பவருக்கு வங்கி அதிகாரி பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. ஏ.டி.எம். காலாவதியாகிவிட்டதாக கூறி அவரது ஏ.டி.எம் அட்டை மீதுள்ள எண் மற்றும் சிவிவி எண்ணை ஆகியவற்றை பெற்றுள்ளார். பின்னர் ஓடிபி மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ஒரு லட்சம் ரூபாயை 5 முறையாக எடுத்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த முதியவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.