கிரண்பேடியை ஹிட்லராக சித்தரித்து போஸ்டர்..

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு, முதல்வர் நாராயணசாமியால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. 

மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும், புதுச்சேரியைவிட்டு அவர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், கடந்த 8ம் தேதி முதல் நான்கு நாள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பு, கிரண்பேடியை திரும்ப போகச் சொல்லியும், அவரை சர்வாதிகாரி ஹிட்லர் போன்று சித்தரித்தும் போஸ்டர்கள் தயாரித்துள்ளது. 

இந்த போஸ்டர்களை, கிரண் பேடியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சிரிக்கும் எமோஜி ஒன்றை போட்டுள்ளார். அதாவது இதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என சிம்பாலிக்காக கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x