இந்திய கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் கிடைக்கும் – மத்திய சுகாதார அமைச்சர்!

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்மிக்க தடுப்பூசியை உலகுக்கு நம்மால் அளிக்க முடியும் என்றார்.

இந்திய தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளது. இவற்றில் ஒரு தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்மிக்க தடுப்பூசியை உலகுக்கு நம்மால் அளிக்க முடியும்.  சோதனை திறனை பலப்படுத்தியுள்ளோம். தற்போது நாடு முழுவதும் 1,500 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. ஆக., 21-ல் பத்து லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. தற்போது குணமடைவோர் விகிதம் 75 சதவீதமாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x