விமான விபத்து: ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்திற்கு ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x