அவசர இ-பாஸ் பெறுவது எப்படி?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவ பரிசோதனைகளுக்கு வெளியூர் செல்ல, தமிழக அரசு அனுமதியளித்தது.

அனுமதி கடிதம்

மாவட்டத்துக்குள் செல்ல தாசில்தாரிடம், வேறு மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டரிடமும் அனுமதி கடிதத்தை பொதுமக்கள் பெற்றனர். ஆனால், மக்கள் குவிந்ததால், நேரில் அனுமதி கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு, ‘ஆன்லைன்’ மூலம், விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதையடுத்து திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்காக பயணிக்க எப்படி ஆன்லைனில் அனுமதி பெறுவது என்பதை பார்க்கலாம்.

இணைப்பை கிளிக் செய்து தங்களது தொலை பேசி எண்ணை கிளிக் செய்யவும்

உடனடியாக பதிவு செய்த எண்ணிற்கு OTP எண் வரும். இதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்

இந்த பகுதியில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, OTPஐ பதிவிடவும்.

அடுத்ததாக E-pass-க்கான விண்ணப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து பூர்த்தி செய்து, ஆன்லைனிலேயே சமர்பிக்க வேண்டும். அலுவலர் பார்வையிட்டு அது ஒப்புதல் அளிக்கப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், உங்கள் மொபைலுக்கு லிங்க் வரும். அதை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இ-பாஸ் பெறும் லிங்க் https://epasskki.info/

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x