“இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி” – திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோஸ்சவ ஏகாந்த திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது.

இதில், இன்று முதல் பக்தர்களை இலவச தரிசனத்துக்கு அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. மேலும், தேவஸ்தான செலவுகளுக்கு கோயில் வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க ஆந்திர அரசிடம் அனுமதி பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதுதவிர, ஏற்கெனவே உண்டியலில் சேர்ந்துள்ள மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் அந்தந்த கவுன்டர்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x