கொரோனாவில் இருந்து மீண்டவர் இல்லத்தில் தகரம் அடித்த விவகாரம்: சுகாதார செயலருக்கு நோட்டீஸ்

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், கொரோனாவில் இருந்து மீண்டவரின் வீட்டை தகரம் வைத்து அடைத்த விவகாரத்தில், விளக்கம் அளிக்கக்கோரி சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிப்பில் வசிக்‍கும் 50 வயது நபருக்‍கு, கடந்த 14 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள், அவரது வீட்டின் கதவு முழுவதும் மூடுமாறு இரும்பு தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர். அந்த வீட்டில் இதய நோயாளிகள் உள்ளிட்ட 4 பேர் வீட்டில் இருப்பதாகவும், எனவே கதவை அடைக்‍க வேண்டாம் எனக்‍கூறியும், அதனை மறுத்த ஊழியர்கள் வாசலை அடைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கக்கோரி, சுகாதாரத்துறை செயலாளர், நகராட்சி ஆணையர், பல்லாவரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x