கட்டிட உட்புற வடிவமைப்பாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காக அர்னாப் கோஸ்வாமி கைது!!

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை காவல்துறையினர் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.
2018-ம் ஆண்டு அன்வாய் நாயக் என்ற கட்டிட உள்வடிவமைப்பாளரும், அவரது தாயாரும் தற்கொலை செய்துக் கொண்டனர். அவர் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
கோஸ்வாமியின் சேனலிலிருந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது குறித்து அலிபாக் போலீஸ் விசாரணை செய்யவில்லை என்று அதன்யா நாயக் புகார் தெரிவித்ததாக தேஷ்முக் தெரிவித்தார். மேலும் அதனால்தான் தன் தந்தையும் பாட்டியும் தற்கொலை செய்து கொண்டதாக மகள் அதன்யா நாயக் புகார் எழுப்பியதாக தேஷ்முக் தெரிவித்தார்.
எனவே ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் எழுந்ததால், மும்பை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுஷாந்த் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி சிறப்பு முனைப்புக் காட்டி மகாராஷ்டிரா ஆளும் சிவசேனாவுக்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பு காட்டியது. இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்குக்காக முறைகேடாக செயல்பட்ட விவகாரம் வேறு அர்னாப் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.