பாப் கட்டிங் செங்கமல யானைக்கு பெருகும் ரசிகர்கள்…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலத்துக்கு, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டி மேக்கப் போட்டு பராமரித்து வருகிறார்.

மன்னார்குடியில், பெரிய கோயில் என்றழைக்கப்படுவது ராஜகோபால சுவாமி கோயில். இங்க வரும் பக்தர்கள், முகப்பில் நிற்கும் யானை செங்கமலத்தோடு மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்; குழந்தைகள் கூதுகலம் அடைகின்றனர். இதற்கு காரணம், இந்த யானை, மனிதர்களைப் போலவே பாப் கட்டிங் ஸ்டைலில் தலை முடியை வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு அழகாக வசீகரிக்கிறது.

இதனால், இந்த யானை, ‘பாப் கட்டிங் செங்கமலம்’ என்றே அப்பகுதியில் எல்லோராலும் அழைக்கப்படுகிறது. யானைக்கு பாப் கட்டிங் வெட்டிவிட்டுள்ள பாகன் ராஜகோபால், அதைத் தன் குழந்தையைப் போல பராமரித்து வருகிறார்.

எப்போதும் இந்த கெட்டப்பிலேயே வலம் வரும் இந்த யானைக்கு உள்ளூர் மட்டுமில்ல, வெளியூரிலும் ரசிகர்கள் உள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x