1,000 அடி பள்ளத்தில் தவறிவிழுந்த இரு இளைஞர்கள்!! செல்ஃபி மோகத்தால் விபரீதம்..

செல்ஃபி எடுக்க முயன்றபோது 1,000 அடி பள்ளத்தில் தவறிவிழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் தாஹியில் வசிக்கும் தினேஷ் (25) மற்றும் பண்டி (22) என்ற இரண்டு இளைஞர்கள் சுற்றுலாத்தலமான ராம்கர் கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் மழை பெய்ததாலும் அடர்த்தியான மூடுபனி நிலவியதாலும் இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றபோது இருவரும் ஒரே நேரத்தில் பள்ளத்தாக்கில் தவறிவிழுந்துள்ளனர்.
போலீசார் விரைந்து சென்று அவர்களை தேடியபோது இரவில் வெளிச்சம் இல்லாததாலும் தொடர் மழை கொட்டியதாலும் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் தவறிவிழுந்த அந்த இரு இளைஞர்களையும் நேற்று காலையில் சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.