தனியார் பேருந்துகள் இயக்கம்; சென்னை கிடையாது!

இந்தியாவில், கொரோனாவால் போடப்பட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கில் படிப்படியாக, பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்படுகிறன.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும். அரசு விதிமுறைகளின் படி மண்டலம் விட்டு மண்டலம் பேருந்துகள் இயக்கப்படாது, பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளி, 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்வது, பயணிகளுக்கு கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x