ராஜஸ்தானில், பா.ஜ.க. ஆதரவை பெற காய் நகர்த்தும் சச்சின் பைலட்!

ராஜஸ்தானில், நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் அமர, கலகத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
காங்கிரஸ், மேலிடம், தனக்கு முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, துணை முதல்வதரான சச்சின் பைலட், தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மார்ச்சிலிருந்து, பா.ஜ.க தலைவர்களுடன், இது குறித்து ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, காய் நகர்த்தி வருகிறார். எனினும், பா.ஜ.,வில் இணையாமல், அவர்களின் ஆதரவுடன், புதிய ஆட்சியை அமைத்து, தான் முதல்வராக ஆவதே சச்சின் பைலட்டின் திட்டம்.
இதற்காக டில்லியில், தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். எனினும், ‘பா.ஜ.க.வில் இணைய சம்மதித்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்’ என சச்சின் பைலட்டிடம் பா.ஜ.க தலைவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.